தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் அன்னதானம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் ரோட்டில் சாய் முதியோர் இல்லம் உள்ளது. அங்குள்ள முதியோர்களுக்கு தாராபுரம் பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் கருணாநிதி, செயலாளர் காஜா மைதீன், செயற்குழு உறுப்பினர் ஜாபர் சாதிக் ஆகியோர் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள், சாய் முதியோர் இல்ல நிர்வாக இயக்குனர் தேவிகா உட்பட  பலர் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்களின் இந்த செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad