ஸ்ரீவைகுண்டம். ஏப்ரல் 18.தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் முதலாவது திருப்பதி ஸ்ரீவைகுண்டம். ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும்.
இந்த ஆண்டு இன்று காலை கொடியேற்றம் நடந்தது. கா 4.00 மணிக்கு விஸ்வரூபம். 4.30 மணிக்கு திருமஞ்சனம். 5 மணிக்கு திருவாராதனம். 5.45 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் தாயார்களுடன் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். 5.50 மணிக்கு கொடி பட்டம் சுற்றி வந்தது. 6.25 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
தினசரி கால உற்சவர் கள்ளபிரான் தோளுக்கினியானில் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு சப்பரம். சிங்கம். அனுமன். சேஷன். கருடன். யானை. பூம்பல்லக்கு. குதிரை. வெட்டி வேர் சப்பரம். ஆகிய வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது.
ஏப்ரல் 22 ந்தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு நம்மாழ்வார் மங்களாசாசனம். மற்றும் கருடசேவை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். நாராயணன். அனந்த பத்மநாபன். சீனு. ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி.சீனிவாசன. திருவேங்கடத்தான். ஸ்ரீவேங்கட கிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன்.
ஆய்வாளர் முருகன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாததேவி கொம்பையா. மாரியம்மாள் சண்முகசுந்தரம். முருகன். பாலகிருஷ்ணன். உபயதாரர் மாநில இந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஈஸ்வரன். பா ஜ க. அமைப்பு சாரா மாவட்ட தலைவர் சித்திரை. முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கந்தசிவசுப்பு. உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக