6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அரசு விடுமுறை நாளான இன்று 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
3 ஆம் எண் அறையில் பக்தர்கள் காத்திருக்கும் படம்.
இன்று அரசு விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித தீர்த்தங்களில் நீராடி சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக