மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ! உயர் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ! உயர் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு!

 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ! உயர் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு!
நாட்றம்பள்ளி, ஏப் 18 -

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்ட ஊராட்சி கோயங்கொள்ளை கிராமத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமலதா தலைமையில் குறுங்காடு அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று கள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இப்போது பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமலதா மரக்கன்று களை நடுவதால் காற்று மாசுபாடு குறைந்து மரங்கள் கார்பன் டை ஆக்சை எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆக்சிஜனை கொடுக்கிறது மண் அரிப்பை மரத்தின்வேர்கள் தடுக்கின்றது என மரம் நடுவதில் முக்கியத்துவம் குறித்து பேசிய நீதிபதி தொடர்ந்து பேசுகையில் மரம் நடுவது மட்டுமே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அல்ல மத்திய மாநில அரசுகள் செயல் திட்டம் தீட்டி மக்களுக்கு செய்ய நினைக்கின்ற திட்டங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் அதற்காக மாவட்ட இலவச சட்ட ஆணைக்குழு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது அதை இங்கு வந்து இருக்கின்ற 100 நாள் வேலை செய்யும் பெண்கள் மகளிர் சுய உதவி குழு பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசவுந்திரவல்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி வழக்கறிஞர்கள் பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 செய்தியாளர்
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad