தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 25) 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகளின்
மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு
சுழற்சி நிலவுகிறது. இதனால்
தமிழ்நாட்டில், திருப்பத்தூர்,
கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர், சேலம், திருச்சி, ஈரோடு,
திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி,
கோயம்பத்தூர், தேனி, மதுரை,
விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி
ஆகிய 20 மாவட்டங்களில் லேசானது
முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அதிக வெப்ப நிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகபட்ச வெப்ப நிலை இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக