கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஏப்ரல், 2025

கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்!

கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்!
குடியாத்தம் , ஏப் 16 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற் றார் இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதி கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வாதிட்டனர் தினசரி மார்க்கெட் உழவு சந்தை எதிரில் உள்ள சாலை ஓர கடைகளை அப்புறப் படுத்த வேண்டும் என்றும் நகரம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது சாலை யில் செல்பவர்களை கடித்து குதறுகிறது இவைகளை கட்டுப்படுத்த வேண்டும் கோழி இறைச்சி கழிவுகளை சாலை களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு கள் ஏற்படுகிறது இது சம்பந்தமாக கோழி கடை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்
வைத்தீஸ்வரன் நகர் எதிரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்குபொதுமக்கள் சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது இதனால் ரேஷன் கடை க்கு என்று ஒதுக்கப்பட்டு இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் எனவே அந்த இடத்தில் ரேஷன் கடை கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
ஊராட்சிப் பகுதிகளில் விளைநிலங் களில் மாடுகளை விட்டு விடுகிறார்கள் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் கூட்டத்தில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் 
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் விவசாயப் பிரதிநிதிகள் சம்பத் நாயுடு ‌ சேகர். சாமிநாதன் துரை செல்வம் பழனியப்பன் தலித் பாஸ்கர் மற்றும் பல துறை அதிகாரி பங்கேற்றனர்
வியாபாரிகள் சங்கத் தலைவரும் நகர மன்ற உறுப்பினர் ஜாவித் மற்றும் இர்பான் தலைமையில் சாலை ஓர வியா பாரிகள் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் பாலாறு வேளாண்மை
கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad