சாத்தரசன்கோட்டையில் சமுதாய குளியல் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணற்றை பராமரித்து பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம பொதுமக்கள் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

சாத்தரசன்கோட்டையில் சமுதாய குளியல் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணற்றை பராமரித்து பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம பொதுமக்கள் வலியுறுத்தல்.


சாத்தரசன்கோட்டையில் சமுதாய குளியல் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணற்றை பராமரித்து பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம பொதுமக்கள் வலியுறுத்தல். 


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மல்லல் ஊராட்சி சாத்தரசன்கோட்டையில் பொது குளியல் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவை பல வருடங்களாக பராமரிப்பின்றி பழுதான நிலையில் புல், புதர், முட்செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்து வரும் அவலநிலை தொடர்கிறது. இதன் காரணமாக கிராம பொதுமக்கள் பொதுப் பயன்பாட்டில் இருந்து வந்த குளியல் தொட்டியை உபயோகப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொது குளியல் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு உள்ளிட்டவற்றை பராமரித்து சீர்செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad