மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பாட்டிற்கு வர இருக்கும் மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலைக்கு கடும் எதிர்ப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பாட்டிற்கு வர இருக்கும் மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலைக்கு கடும் எதிர்ப்பு.


மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பாட்டிற்கு வர இருக்கும் மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலைக்கு கடும் எதிர்ப்பு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை நிறுவப்பட்டு வரும் நிலையில், இந்த மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலை மூலமாக சுகாதாரக் சீர்கேடு மற்றும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவது உறுதியென அச்சம் எழுந்துள்ளதன் காரணமாக மருத்துவர் கழிவு ஆலை நிறுவும் பணியை கைவிட்டு, ஆளையே நிரந்தரமாக மூடக்கோரி மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பாக அரசியல் கட்சியினர், மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மருத்துவ கழிவு ஆலைக்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை செயல்பாட்டிற்கு வருவதை தடுத்து நிறுத்த இம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக வலியுறுத்திப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad