கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் திட்டமான கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் முன்னெடுப்பான ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டமானது கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இயக்கமாக மாறிக் கொண்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு அனைத்து கிராமங்களிலும் காவல்துறைக்கு பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. கன்னியாகுமரியில் நடந்த இத்திட்டத்தின் அறிமுக கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.மதியழகன் இத்திட்டத்தின் கீழ் அந்த கிராமத்திற்கு நியமிக்கப்பட்ட காவலரை அறிமுகப்படுத்தி இத்திட்டத்தின் நோக்கத்தினை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.மகேஷ்குமார், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
இத்திட்டத்தின் கீழ் மாவட்ட முழுவதும் கிராமங்களின் தெருக்களில் பொதுமக்கள் உதவியுடன் இதுவரை 94 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கை மேலும் தீவிர படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் நியமிக்கப்பட்ட காவலர்களின் செல்போன் எண் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். செல்போன் எண்கள் வரை பொதுமக்கள் அறிந்து வைத்திருந்து உடனடியாக தகவல் அளிப்பதால் கெட்ட நடத்தைக்காரர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கவும், நடந்த குற்றங்களை விரைவில் கண்டறியவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் குற்றங்கள் மற்றும் போதை பொருள்கள் இல்லா கன்னியாகுமரியை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக