சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் “நான் முதல்வன்” வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயின்ற, 2024–2025 கல்வியாண்டிற்கான கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான நான் முதல்வன் வேலை வாய்ப்பு முகாம் அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இம் முகாமில் பல்வேறு துறைளைச் சேர்ந்த 12 பிரபல தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகளிலிருந்து இறுதியாண்டு பயின்று வரும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்ட நான் முதல்வன் திட்ட அலுவலர் ஹரிஹரசுதன், அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் முருகன், நான் முதல்வன் திட்டத்தின் MIS ANALYST யோகஸ்ரீ, கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி முகமையின் ஒருங்கிணைப்பாளரும் விலங்கியல் துறை இணைப் பேராசிரியருமான முனைவர் சோமசுந்தரம் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகமையின் உறுப்பினர்கள் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கவிதா, தொழில் நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் தியாகராஜன் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் ஸ்ரீபால் மற்றும் தர்மராஜ் ஆகியோர் இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக