வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய தவெக கட்சியினர்!
ராணிப்பேட்டை , ஏப் 19 -
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்ததை வரவேற்று கொண்டாடும் வகையில் மேற்கு மாவட்ட தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் வக்ஃப் (WAQF) வாரிய சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் தின் தலைவர் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார் அதனை தற்போது உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து இஸ்லா மியர்கள் வக்ஃப் உறுப்பினர்கள் ஆக முடியாது என்ற சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்ததை வரவேற்று கொண்டாடும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மேல்விஷாரம் நகரம் அஸ்கர்அலி ஏற்பாட்டில் மேற்கு மாவட்ட செயலாளர் பூக்கடை மோகன் தலைமையேற்று கட்சி தொண்டர்கள் மற்றும் இஸ்லாமிய சகோ தரர்கள் அனைவரும் ஒன்று இணைந்து மேல்விஷாரம் பகுதி முழுவதும் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் அதேபோல் பொதுமக்களிடம் சென்று இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.இந்த நிகழ்வில் ஆற்காடு நகரம் வினோத், வாலாஜா கிழக்கு ஒன்றியம் தீனா, மற்றும் மாவட்ட இணைச்செயலாளர் காந்தி பிரசாத், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட துணைச்செயலாளர் அன்பு, சசிகலா, மற்றும் கலைவாணி, ராஜலட்சுமி, துர்காதேவி, முஹம்மத் யாசின், திரவிநாதன் உட்பட நகர ஒன்றிய, பேரூர், பிற அணி மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக