சர்வதேச புகழ் பெற்ற கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் போன்ற இடங்களை பார்வையிட பல மணி நேரம் கியூவில் காத்திருக்க வேண்டியுள்ளது.
தற்போது கடுமையான வெயில் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நுழைவாயிலில் நிழல் பந்தல் அமைத்தது பாராட்டத்தக்கது.
இதேபோல் சன்னதி தெரு, ரத வீதி போன்ற இடங்களில் நிழல் பந்தல் அமைக்க அப்பகுதி வியாபாரிகள் முன்வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக