நெல்லை அரசு மருத்துவமனையில் மாவட்ட தொடக்கநிலை இடையேயிற்று சேவை மையம் சார்பாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அண்ணா பிளவு உதடு பிளவு குறைபாடுகள் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் கண்புரை நோய் காது கேளாமை உட்பட பல சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆட்டிசம் எனப்படும் மதி இறுக்கம் உலகம் முழுவதும் ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக ஏப்ரல் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்படுவதோடு ஆட்டிசம் குறைபாடு மரபணு மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் மூலம் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது.
ஆரம்ப காலகட்டத்திலேயே ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வும் அதற்கான ஆரம்ப கால சிகிச்சை கிடைத்தால் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும்.
தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் குறைபாடு இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி பலன் தெரிவித்தார்.
இதில் கலந்துகொண்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் பேசும்போது ;
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மூன்றாம் இடத்தில் இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் முதலில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் மனு தான் வாங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சைகள் மற்றும் சலுகைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட மக்கள் அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் விதமாக வரக்கூடிய காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடு மட்டுமே தவிர மற்ற மூடநம்பிக்கைகளோ கிடையாது.
ஆட்டிசம் குறைபாடு இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சியும் மருத்துவர்கள் ஆலோசனைகளும் வழங்கி அவர்கள் ஆட்டிசம் குறைபாட்டில் இருந்து மீண்டு வருவதற்கு அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசு சார்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக