டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஏப்ரல், 2025

டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


"SDAT- ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம்" டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் டேக்வாண்டோ விளையாட்டானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி இவ்விளையாட்டு பயிற்சி மையத்துக்கு டேக்வாண்டோ பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்க அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயது வரம்பு 50. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டரங்க அலுவலக முகவரியில் 21.04.2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 25.04.2025 அன்று நடைபெறும். நேர்முகத் தேர்வு அன்று உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும். இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப்பணியோ கோர இயலாது.

மேலும், விளையாட்டு பயிற்சி மையத்தில் டேக்வாண்டோ பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகள் இருபாலரும் பங்கேற்கலாம். இதற்கான உடல் தகுதி தேர்வு வருகிற 28.04.2025 தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. உடல் தகுதி தேர்வுக்கு பங்கேற்க வருபவர்கள் ஆதார் அட்டை, பிறப்புச்சான்றிதழ், பள்ளி கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி, தொலைபேசி எண்:0461 2321149, தொலைபேசி எண்:7401703508 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad