தாராபுரத்தில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் தாசில்தாரிடம் மனு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தாராபுரத்தில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் தாசில்தாரிடம் மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சித்ராவுத்தன் பாளையம்  கிராமத்திற்கு உட்பட்ட, ராம்நகர், எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க கோரி ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் காளிமுத்து தலைமையில் 25- க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- தாராபுரம்  சித்ராவுத்தன்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட, ராம்நகர், எல்லீஸ்நகர் பகுதிகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ச்சியாக கடந்த   5 ஆண்டுகளாக, மாவட்ட ஆட்சியர், தாசில்தார், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் என அனைவருக்கும் வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளார்கள்.ஆனால் இதுவரையிலும் இவர்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா கிடைக்கவில்லை.எனவே தாங்கள் தொடர்ச்சியாக பட்டா கேட்டு அலைகின்ற இம்மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா கிடைக்க  நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ராமன் மற்றும் நம்பிராஜ், தீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad