கன்னியாகுமரி மாவட்டம். தனியார் கல்லூரி பேருந்து மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு கார்மல், இராமன்புதூர் செட்டிகுளம் வழியாக அசுர வேகத்தில் வந்தது.
அந்த பேருந்து எண் (TN 99 Q 4822) கல்லூரியின் 23ம் நம்பர் பேருந்து, கார்மல் பகுதியில் பல பேரை இடித்து தள்ளுவது போலவும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை உரசி விட்டும் கடைசியாக செட்டிகுளம் திருப்பத்தில் ஒரு காவல்துறை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வந்த இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளியது.
காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி வாகனங்கள் வேகமாக செல்கிறது என அதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்கா கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக