வேலூர் , ஏப் 28 -
வேலூர் மாவட்டம் காயிதே மில்லத் கூட்டுறவில் நடைபெற்ற குறை தீர்வுநாளில் சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்து 09.12.2024 அன்று மாரடைப் பால் உயிரிழந்த இளைஞர் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம். மேல்வடு கன்குட்டை, கரசமங்கலத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் இறப்பு உறுதி செய்த பிறகு சட்டபூர்வ வாரிசுதாரரான ராஜேஸ்வரி என்பவரிடம் இறப்பிற்கான இழப்பீட்டு தொகை ரூ.1.24,97,987/-க்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்கள் இன்று (28.04.2025) காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் வழங்கினார். இக்கூட்டத் தில் மாவட்ட வருவாய்அலுவலர்ந.மாலதி சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்முல்லை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக