நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியின் முன்பு குப்பை கிடங்குகளாகவும் நடைப்பாதையை சுத்தம் செய்யாமல் இருக்கும் அவலநிலை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஏப்ரல், 2025

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியின் முன்பு குப்பை கிடங்குகளாகவும் நடைப்பாதையை சுத்தம் செய்யாமல் இருக்கும் அவலநிலை


நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியின் முன்பு குப்பை கிடங்குகளாகவும் நடைப்பாதையை சுத்தம் செய்யாமல் இருக்கும் அவலநிலை


நீலகிரி மாவட்டம் உதகையில்  அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது  இந்த பள்ளியில் இரு நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் ஒரு நுழைவு வாயில்  அருகே மற்றும் தடைசெய்யப்பட்டுள்ள  பிளாஸ்டிக் மற்றும் குப்பை பொருட்கள் கொட்டபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகம் சுளித்து முகத்தை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் பல்வேறு இடத்தில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி மிக பழமை வாய்ந்த பிரபலமான சேட் மருத்துவமனையும் அமைந்துள்ளது இந்த மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கி உள்ளனர். இந்த குப்பை கிடங்கினால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுத்தம் செய்து தருமா நகராட்சி நிர்வாகம் மக்கள் எதிர்பார்ப்பு. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad