வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஏப் 22 -
வேலூர் மாவட்டம் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறை படுத்த கோருதல், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை மீண்டும் வழங்க கோரு தல் ஒப்பந்த ஊதியம் மதிப்பூதியம் தினக்கூலி முறையினை இரத்து செய்து அனைவருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 22.04.2025 மாலை 5.00 மணியள வில் கோரிக்கை பேரணி அனுமதி வழங்கபட வில்லை. அதற்கு மாற்றாக ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்றது.ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன், ஆகியோர் கூட்டு தலைமை தாங்குகினர். தமிழ்நாடு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைப் பொதுச் செயலா ளர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசினார்.அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எம் எம்.சிநேகலதா முன்னிலை வகித்தனர்.மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் உருதுவழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி கனினி ஆசிரியர் சங்க மாவட்ட மாநில செயலாளர் ஜி.கோபி, ஆகியோர் பேசினர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் எஸ்.சபிதா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் எ.டி.அல்போன்ஸ்கிரி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார் தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில சட்ட செயலாளர் காந்தி, மாவட்ட செயலாளர் கே.தனசேகர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி டி பாபு, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் பெ.இளங்கோ, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல காப்பாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் துரை கருணாநிதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பி ரமேஷ், ஜாக்டோ செய்தித் தொடர்பாளர் வாரா ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ப வேலு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுமதி எம்ஆர்பி செவிலியர் சங்க செயலாளர் ஹேமச்சந்திரன் மருத்துவ பிரதிநிதிகள் சங்க செயலாளர் வேந்தன் ஆகியோர் உள்பட பலர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் பஞ்சம் அவர்கள் தேர்தல் கால வாக்குறுதிக ளை ஈவற்ற ஒரு கிபி பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த கோரியும் காலவரம் நன்றி முடக்கி வைக்கப் பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட கோரியும் ஊதிய முரண்பாடு களை களைய கோணி சிறப்பு கால முறை மதியம் பத்து வரும் சத்துணவாடி வருவாய் கிராம உதவியாளர்களுக்கு ஊர் புற செயலாளர்கள் எம்ஆர்பி செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் புரியும் 21 மாத ஊதியமாற்ற நிலுவைத்தொகை வழங்கிட கோரியும் சாலை பணியாளர் களின் 41 மாத கணினித்து காலத்தை முறைப்படுத்த கோரி பத்து அம்ச கோரிக்கைகளை கோஷங்கள் எழுப்பினர இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 பெண்கள் உட்பட 500 பேர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக