போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பல்வேறு கட்சியின் கொடி கம்பங்கள் அதிரடி அகற்றம்!
குடியாத்தம் ,ஏப் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன இது சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காலை உதவி கோட்ட பொறியாளர் அமுலு தலைமையில் உதவி செயற் பொறியாளர் யோகராஜ் சாலை ஆய்வாளர் ரஞ்சிதா மற்றும் நெடுஞ் சாலை துறை பணியாளர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் விநாயகபுரம் முதல் அம்பேத்கர் சிலை வரை சாலையில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களை யும் அப்புறப்படுத் தினார்கள்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக