நாசரேத் உலக புவி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனை துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

நாசரேத் உலக புவி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனை துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி.

ஏப்ரல் 22, நாசரேத் உலக புவி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனை துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் ஆரம்பமாக நாசரேத் அட்வான்ஸ் கைத்தொழில் பாடசாலை முதல்வர் ஜான்சன் ஐசக் வரவேற்றுப் பேசினார். சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குனர் ஜான் சாமுவேல் புவியை காப்பதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். 

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கைத்தொழில் பாடசாலை மாணவர்கள் நாசரேத் வாரச்சந்தையில் புவியை காப்பதற்கான விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்கள். இறுதியாக ஆசிரியர் ஜோசப் ராஜா நன்றி கூறினார். 

இந்நிகழ்ச்சியில் கைத்தொழில் பாடசாலை ஆசிரியர் ஜெபராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad