திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தேர் நிழற்கூடம் அமைக்க கால்கோள் விழா - தலைவர் தர்மர் அடிக்கல் நாட்டினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தேர் நிழற்கூடம் அமைக்க கால்கோள் விழா - தலைவர் தர்மர் அடிக்கல் நாட்டினார்.

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தேர் நிழற்கூடம் அமைக்க கால்கோள் விழா - தலைவர் தர்மர் அடிக்கல் நாட்டினார்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் நிதி உதவியுடன் தேர் கூடம், இந்திர வாகனம் நிறுத்துவதற்கான நிழற்கூடம் மற்றும் கூட்ட அரங்கம் அமைக்கும் பணிக்கான கால்கோல் விழா இன்று பதி வளாகத்தில் நடைபெற்றது. 

அய்யா வைகுண்டர் அவதார பதி தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் புதிய நிழற்கூடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தநிழ்ச்சிக்கு செயலாளர் பொன்னுதுரை முன்னிலை வகித்தார்.

முன்னதாக கோவிலில் சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அய்யா வைகுண்டர் அவதார பதி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சந்திர சேகரன், ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், பொருளாளர் கோபால் நாடார், துணை தலைவர் அய்யா பழம், இணைத் தலைவர்கள் செல்வின்ஆசிரியர், பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, இணை செயலாளர்கள் வரதராஜ பெருமாள், தங்க கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், சுதேசன், 

திருநெல்வேலி நாடார் உறவின் முறை சங்க தலைவர் அசோகன், திருநெல்வேலி மாவட்ட டாக்டர் சின்னய்யா நற்பணி மன்ற 
துணை செயலாளர் அய்யாசாமி, அவதார பதி நிர்வாக குழு உறுப்பினர்கள் கேடிஎம். செல்வக்குமார், பாலகிருஷ்ணன், துவையல் தவசி செல்வகுமார், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன் , உறுப்பினர்கள் பால்ராஜ், அழகேசன், ஒப்பந்ததாரர் சேகர், வேல்முருகன், பொறியாளர் சோமன், அசோக்குமார் ஆதித்தன், ராஜன்ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad