நெய்வேலி, ஏப்.23:
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அதிமுக மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலகண்ணன், “தமிழ்நாடு முதல்வரே அரசு ‘Out of Control’ நிலையில் இருப்பதாக சொல்கிறார். உண்மையிலேயே தற்போதைய திமுக அரசு அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடின்றி இயங்கி வருகிறது.
விலைவாசி உயர்வு, மின் கட்டணப்பெருக்கம், வரி சுமைகள், மக்களுக்கான திட்டங்கள் ரத்து—all are out of control,” எனக் கடும் விமர்சனம் மேற்கொண்டார். மேலும் அவர், “மக்களை நம்பிக்கையுடன் நடத்த வேண்டிய அமைச்சர் பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருக்கிறார். சாதியை குறிப்பிடுவதோடு, ‘ஓசி ஓசி’ என நையாண்டிப் பேச்சு பேசும் அவர், இனி பதவியில் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்,” என்றார்.
இவ்விழாவில் பங்கேற்ற மகளிர் அணியினரும், “அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!” “Out of Control ஆட்சியை விலக்க வேண்டும்!” என கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வு, தற்போதைய அரசின் செயல்முறைகளையும், அமைச்சர்களின் பொறுப்பற்ற அணுகுமுறையையும் மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக