ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, புலி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வெயில் வாட்டி வதைப்பதால் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி கிராமத்துக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் வரட்டுப்பள்ளம் அணை வியூ பாயிண்ட் பகுதியில் ஒரு சிறுத்தை சாலையை கடந்து சென்றது.
பர்கூரில் இருந்து காரில் வந்தவர்கள் சிறுத்தையை பார்த்துள்ளனர்.
அவர்கள் தங்களது செல்போனில் சிறுத்தை நடமாட்டத்தை வீடியோவாக பதிவு செய்தனர். இதேபோல் தாமரைகரை செல்லும் வழியில் கொண்டை ஊசி வளைவுகள், வனப்பகுதியில் உள்ள பாறைகள் மீது சிறுத்தை படுத்திருந்ததை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வரட்டுப்பள்ளம் அணைப்பகுதி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமாக திகழ்கிறது. தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிக்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக