தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி செயற்குழு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஏப்ரல், 2025

தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி செயற்குழு கூட்டம்

தாராபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தண்டா பாணி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் முகிலரசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஒண்டிவீரன், மாணவரணி மாநில துணைச் செயலாளர் விடியல் தில்லை மற்றும் தொழிலாளர் அணி மாநில துணைச்செயலாளர் பொன்.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மே 25 -ந் தேதி தாராபுரத்தில் வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி பொதுக்கூட்டம் நடத்துவது, தாராபுரம் நகராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படமால் நோய் பரப்பும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை சரி செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad