மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை.

 


மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தொடர்ந்து 100 சதவீதம் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் உள்ள 500 மதிப்பெண்களுக்கு பாபா மெட்ரிக் பள்ளி மாணவி எம்.சோபிகா 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். அம்மாணவியை தொடர்ந்து பி. ஆகாஷ் 482 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், எம். கவியரசு பாண்டியன் 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமைச் சேர்த்துள்ளனர். அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் அம்மா திருமதி பி. ராஜேஸ்வரி அவர்கள் பரிசுகள் வழங்கினார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன், பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி, பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கேக் வெட்டி, இனிப்புக்களை பகிர்ந்து தங்கள் வாழ்த்துக்களை மாணவர்களுக்கு தெரிவித்தனர். பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad