தாராபுரம், விவேகம் பள்ளி 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. பள்ளி அளவில் 497 மதிப்பெண்கள் பெற்ற வெ.க.நிதர்ஷனா 3 பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,496 மதிப்பெண்கள் பெற்று கு.ஸ்ரீவர்ஷினி இரண்டாமிடமும், 495 மதிப்பெண்கள் பெற்று கா.சு. தக்ஷிதா ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். மேலும் பள்ளியில் 50 சதங்கள் எடுத்தும் மாணவர்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

விவேகம் பள்ளியில் இக்கல்வியாண்டிலும் மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுச் சாதனைப் புரிந்துள்ளனர். இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விவேகம் பள்ளியின் தாளாளர் முனைவர். ஆர். சுப்பிரமணியன், செயலாளர் முனைவர். கே. பூபதி மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக