நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை.

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நாசரேத் சுற்றுவட்டாரத்தில் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்தது. பத்தாம் வகுப்பு மாணவி கிறிஸ்லின் 487/500 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். 

அறிவியியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நிக்கிதா மேத்தியூ அண்டோ 486/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி ஜெருஷா அணி 472/500 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். 

இவர்களை பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன், நிர்வாகி பியூலா சாலமோன், கல்வி தலைவர் எலிசபெத் ரோஸ் பால், பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ், உதவி முதல்வர் மாரிதங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளை பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad