திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நேதாஜி வீதி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரின் பெற்றோர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவருக்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனர் இருவரும் மனவளர்ச்சி குன்றியவர்கள். அவர்கள் இருவரையும் ரவிச்சந்திரன் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் கூறியதாவது ரவிச்சந்திரனின் தாயாருக்கு சொந்தமான இடம் தாராபுரம் தாளவாய்பட்டினம் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதன் அருகிலேயே ரவிச்சந்திரனின் பெரியம்மா மகன் இளங்கோவனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. இளங்கோவன் சம்மதத்துடன் மொத்தம் உள்ள ஆறு ஏக்கர் நிலத்தை விற்க ரவிச்சந்திரன் நடவடிக்கை மேற்கொண்டார். ஏக்கர் 25 லட்சம் வீதம் தாராபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் மற்றும் சுகுமார் ஆகியோருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இளங்கோவன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு வர வேண்டிய 40 லட்சம் பணத்தை தராமல் ஸ்டாலின் மற்றும் சுகுமார் ஏமாற்றி வருவதாகவும் இது குறித்து கேள்வி கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியும் வருகின்றனர் என்றும். இது தொடர்பாக பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் தனக்கு வரவேண்டிய 40 லட்சம் பணத்துடன் 25 லட்சம் சேர்த்து மொத்தமாக கொடுத்து விடுவதாக கூறிய ஸ்டாலின் மற்றும் சுகுமார் அந்த பணத்தை தராமல் சுமார் 4 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர். ஒவ்வொரு முறை கேட்க செல்லும் பொழுது கொலை செய்வதாக மிரட்டியும் வருகின்றனர். எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும் அப்பொழுதுதான் எனது அண்ணன்களின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக