அப்ரண்டீஸ் பயிற்சி காலம் ஒரு வருடம் முடிந்த பிறகு அப்ரண்டீஸ் பயிற்சியாளர்களை வெளியே எடுத்து விடுகிறது தமிழ்நாடு மின்சார வாரியம். சுமார் 5,000 ஆயிரம் குடும்பங்கள் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்,
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு அப்ரண்டடீஸ் டடிரேடு யூனியன் (TNEBATU) மாநில பொதுச்செயலாளர் திரு. பா. நந்தகுமார் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து அப்ரண்டீஸ் தொழிற்சங்க கோரிக்கைகளை முன்வைத்து மனு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில் மீண்டும் அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக