திருமங்கலம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த , அருள்மிகு பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம் .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நக்கலக்கோட்டை கிராமத்தில், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது .
முன்னதாக, கோவில் முன்பு உள்ள வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க கலச தீர்த்தங்களை பூஜித்த பின்பு, பூஜித்த கலச தீர்த்தத்தை சிவாச்சாரியார் கணபதி பட்டர் தலைமையில் எடுத்து கோபுரத்தின் மேல் உள்ள கலசத்திற்கு மகா சம்ப்ரோஷணம் செய்தனர்.
இதனை தொடர்ந்து, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்தனர்.
இவ்விழாவில், முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைமணி மற்றும் திருமங்கலம் ,உசிலம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக