ஈரோட்டில் ஜமாபந்தி முகாம் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

ஈரோட்டில் ஜமாபந்தி முகாம் :



ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது. ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரேமலதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பட்டா மாற்றம், விலையில்லா வீட்டுமனை பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 53 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.


இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ் ஆகிய 2 மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, நம்பியூர் ஆகிய தாலுகாக்களில் ஜமாபந்தி முகாம் வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இதேபோல் அந்தியூர் தாலுகாவில் 28ஆம் தேதி வரையும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய தாலுகாக்களில் 29ஆம் தேதி வரையும் நடக்கிறது. இதில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை ஆகிய நாட்கள் நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாளவாடி தாலுகாவில் ஜமாபந்தி முகாம் நேற்று நிறைவு பெற்றது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad