நெமிலி அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்!
ராணிப்பேட்டை , மே 23 -
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மேட்டுவேட்டாங்குளம் கிராமத் தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). கடந்த 19ம் தேதி இவரிடம் உளிய நல்லூர் ஊராட்சி வெள்ளக் குட்டையை சேர்ந்த 5 பேர் காரில் வந்து தகராறு செய்து தாக் கிய தாக கூறப்படுகிறது. இது குறித்து மணிகண்டன் மற்றும் அப்பகுதிமக்கள் நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடை யில், காரில் வந்து தகராறு செய்த கும்பல் தனது நண்பர்களிடம் மேட்டு வேட்டாங் குளத்தை சேர்ந்த யாரையாவது தாக்கி விட்டு வரும்படி கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் படி, நேற்று முன் தினம் காலை 7 மணியளவில் 2 பைக்கு களில் மேட்டு வேட்டாங்குளம் பகுதிக்கு வந்த ஒரு கும்பல், விவசாய நிலத்தில் இருந்தவர் களை கத்தியால் வெட்ட முயன்றனர். அப்போது. தப்பியோடிய தட்சிணா மூர்த்தி (வயது 27) என்பவரை அந்த கும்பல் ஓட ஓட வெட்டிக்கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவி னர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சடலத் துடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி விவேகானந்த சுக்லா, அரக்கோணம் ஆர்டிஓ வெங்கடே சன், நெமிலி தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்கள், கொலை செய்த குற்றவாளிகள் மீதும். புகாரை முறையாக விசாரித்து நடவடிக் கை எடுக்காத போலீசார் மீதும் நடவடிக் கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி னர். அதற்கு எஸ் பி, குற்றவானிகளை கைது செய்து உரிய தடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். எனவே, பொது மக்கள் மறியலை கைவிட்டனர். இதை யடுத்து எஸ்பி விவேகானந்த சுக்லா. புகார் மனு மீது உடன டியாக நடவடிக்கை எடுக்காத நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் குமார். போலீஸ்காரர் தனசேகர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தர விட்டார். தொடர்ந்து. டி எஸ் பி ஜாபரசித்திக், ஏ டி எஸ் பி குணசேகரன். இன்ஸ்பெக்டர் விஜய லட்சுமி ஆகியோர் தலைமையிலான 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய உளியநல்லூரை சேர்ந்த வாசுதேவன் (வயது 28). திருவள்ளூர் மாவட் டத்தை புருஷோத்தமன் (வயது 22), கிஷோர் (வயது 19). எஸ்.கிஷோர் (வயது 21), லோகேஸ்வரன் (வயது19) ஆகிய 5 பேரை தனிப் படை போலீசார் நேற்று காலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மேட்டுவேட்டாங்குளம், அகவலம் கிராமங்க வில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகு தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக