குடியாத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022 -2023 ல்
கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு விழா!
குடியாத்தம் , மே 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 28 வது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் மதிப்பிலான நியாய விலை கடை கட்டிடம் இன்று காலை திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு 28 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜி எஸ் அரசு தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜியன் அவர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் இதில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் கே ரவி வட்ட வழங் கல் அலுவலர் ஏ பிரகாசம் பி சி எம் எஸ் செயலாளர் சந்தோஷ் குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்னர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக