பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு கல்வித் தொகை வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டதமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும்வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தூத்துக்குடி தாமஸ் நகரில் நடந்தது
விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் ஏ. அஜிதாஆக்னல் தலைமையில், மாணவ மாணவிகள கேக் வெட்டி தங்களது வெற்றியை பகிர்ந்து கொண்டனர்
மேலும் 498மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூரை சேர்ந்த மாணவி ரேஷ்மா, மற்றும் 497 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற, தூத்துக்குடியை சேர்ந்த மாணவி ஜெர்லின் ரக்ஷனா, மற்றும் பெற்றோர்களை இழந்தாலும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற
தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்த மாணவி ஹர்ஷினி ஆகிய வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் . உயர்கல்வி படிப்பதற்கான கல்வி கட்டணங்களை வழங்கி மாணவ மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்துஏராளமான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக