10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை மத்திய சிறைக் கைதிகள் 100% சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் இருந்து இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து 44 கைதிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். 16 ம் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வு முடிவுகளில், சிறைவாசிகளின் இந்த அபார வெற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறைவாசிகளுக்கு கல்வி அளிப்பதன் முக்கியத்துவத்தையும், அவர்களின் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளையும் இந்த சாதனை எடுத்துக்காட்டுகிறது. சிறை நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின்தொடர் முயற்சியின் பலனாகஇந்த மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக