கோவையில் உடல்நலக் குறைவால் பெண் யானை- தீவிர கண்காணிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 மே, 2025

கோவையில் உடல்நலக் குறைவால் பெண் யானை- தீவிர கண்காணிப்பு!

 


கோவையில் உடல்நலக் குறைவால் பெண் யானை- தீவிர கண்காணிப்பு!


கோவை மருதமலை அடிவாரத்தில் உடல் நலக்குறைவால் பெண் யானை ஒன்று விழுந்து கிடந்தது.வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர்,குட்டியுடன் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்த யானை சோர்வடைந்து விழுந்ததை கண்டனர். போலு வாம் பட்டி காப்பு காட்டை ஒட்டிய பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் பாதுகாவலர்கள் ,கோவை வனச்சரக அதிகாரிகளுடன் இணைந்து யானையின் உடல்நிலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கால்நடை மருத்துவ குழுவினரும் வனத்துறையினரும் இணைந்து யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad