தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி மாதம் 7.7.2025ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கும்பாபிஷேகம் செய்வதற்கு நல்ல நேரத்தை திருச்செந்தூர் முருகன் கோவில் விதாயகர்த்தா சிவசுவாமி சாஸ்திரிகள்
முகூர்த்தை குறித்து கொடுத்தார்.
அவை அதிகாலை 6:00 -7:00, 9:00-10:30 மணி என கூறினார். அப்பொழுது புதிய வருட பஞ்சாங்கம் வரவில்லை என்பதால் பொதுவான முகூர்த்தத்தை குறித்து கொடுத்தார்.
இந்நிலையில் விஸ்வாவஸு வருடம் பிறந்து பஞ்சாங்கம் வந்தவுடன் பார்த்ததில் 7.7.2025 திங்கள் கிழமை சுக்லபக்ஷ த்வாதசி அனுஷம் நட்சத்திரம் சித்த யோகம் நேத்ர ஜீவ பலம், நிஷ்பஞ்சகம் கூடிய நல்ல நேரமான
மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி மிக நல்ல முகூர்த்தம் எனவும் அந்த நேரத்தில் அபிஜித் நட்சத்திரம் வருவதால் கும்பாபிஷேகம் செய்வதற்கு மிக துல்லியமான நேரம் என விதாயகர்த்தா மற்றும் ஸ்தலத்தார் சபை, கைங்கர்ய சபை ஆகியோர் கலந்துரையாடி முகூர்த்த பட்டோலையை தபால் மூலம் தேவஸ்தானத்திற்கு அனுப்பிவைத்தனர்.
மற்ற நேரங்களில் முகூர்த்தத்தில் சின்ன குறைபாடு உள்ளதால் 12:05 மணி முதல் 12:47 மணிக்குள் கும்பாபிஷேகத்தை வைத்தால் கோவிலுக்கும், நாட்டை ஆளும் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் நல்லபடியாக இருக்கும் என கூறியுள்ளனர்.
அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணி தான் கும்பாபிஷேகம் நடைபெறம் என விதாயகர்த்தா மற்றும் ஸ்தலத்தார் சபை கைங்கர்ய சபை ஆகியோரிடம் கூறியுள்ளனர்.
இதனால் எதிர்பு தெரிவித்துள்ளனர்
விதாயகர்த்தா மற்றும் ஸ்தலத்தார் சபை, கைங்கர்ய சபையினர். பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகள் பின்னர் நேரத்தை அறிவிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
அபிஜித் முகூர்த்தம் என்பது என்னவென்றால் நிழல் விழாத முகூர்த்தம் இந்த முகூர்த்தம் 7.7.2025 அன்று 12:05 மணிக்கு வருவதால் இந்த முகூர்த்தத்தில் கும்பாபிஷேகம் செய்தால் வேறு ஏதாவது குறைகள் இருந்தாலும் சரியாகிவிடும் எனவும் கூறியுள்ளனர்.
மற்ற கோவில்களை போல் இல்லை திருச்செந்தூர் முருகன் கோவில்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் குமார தந்திர முறைபடி பூஜை நடைபெறுவதால் அபிஜித் முகூர்த்தத்தில் வைத்தால் மிகவும் நல்லது எனவும் கூறியுள்ளனர்.
116 ஆண்டுக்கு முன்னால் 1909 வது வருடம் அபிஜித் முகூர்த்தத்தில் மதியம் 12:00 மணிக்கு மேல் பிரதிஷ்டா அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடந்துள்ளது. எனவே அபிஜித் முகூர்த்தத்தில் கும்பாபிஷேகம் வைக்க வேண்டும் என திருச்செந்தூர் முருகன் கோவில் விதாயகர்த்தா, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்வதந்திர பரிபாலன ஸ்தலத்தார் சபை மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கைங்கர்ய
சபையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் ஆர் சுந்தரராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக