திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடைவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 மே, 2025

திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடைவிழா.

திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடைவிழா.

தட்டு பிரசாத ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட கிராம தேவதை ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் கொடைவிழா இன்று நடந்தது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு பால்குடம் திருவீதி உலா நடந்தது. 

இதில் பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடம் அணிந்து வந்தனர். காலை 9.30.மணிக்கு அபிஷேகம், காலை 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து காலை 11 மணிக்கு திருக்கோவிலில் இருந்து தட்டு பிரசாதம் புறப்பாடு மதியம் 1 மணிக்கு அம்பாள் தாடகத்தி வேடத்தில் நகர்வலம் வருதல் நடந்தது. 

விழாவையொட்டி சபாபதிபுரம் தெரு திருநாவுக்கரசர் திருமண மண்டபத்தில் காலை டிபன், மதியம் 1மணி முதல் 3 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

 இரவு 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நள்ளிரவு இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும், நள்ளிரவு 1 மணிக்கு முத்தாரம்பாள் தங்க சப்பரத்தில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

புதன்கிழமை மாலை 4 மணிக்கு அம்பாள் சப்பரம் திருக்கோவில் சேர்க்கை 5 மணிக்கு படப்பு தீபாராதனை, படப்பு அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை சைவ வேளாளர் சங்கத்தினர், இளைஞர் பேரவையினர் செய்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad