தானிஷ் அகமத் தொழில்நுட்பக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 மே, 2025

தானிஷ் அகமத் தொழில்நுட்பக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி!

தானிஷ் அகமத் தொழில்நுட்பக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி!

கோவை,மே‌ 6 -

கோயம்புத்தூர் மாவட்டம் கா.கா.சாவடி யில் அமைந்துள்ள தானிஷ் அகமது தொழில்நுட்ப கல்லூரியில் இன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த ஆசிரியர்களுக்கான திறன் மேன்பாடு பயிற்சியானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சி க்கு  IBM நிறுவனத்தின், இந்தியா மற்றும் தெற்கு ஆசியா நாடுகளின் மேலாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்து கலந்து உரையாடினார். 
மாணவர்கள் அனைவரும் தங்களது துறை சார்ந்த அடிப்படைகருத்துக்களை முழுமையாக தாங்கள்தயார் படுத்தி கொள்ள வேண்டும். இது தவிர, இதர துறை சார்ந்தபொது அறிவுகளையும் வளர்த்துகொள்ள வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு பொறியியல் மாணவர்கள் குறைந்த பட்சம் 5 திறன் மேன்பாடுச் சான்றிதழ்களை பெற்றிருத் தல் அவசியம். இதன் வாயிலாகமாணவர் களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர உதவும் என்று கூறினார்.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் கே.ஏ.அக்பர் பாஷா அவர்கள்  தலைமை வகித்தார், கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.தமீஸ் அகமது அவர்கள் முன்னிலை வகித்தார்.  கல்லூரியின் முதல்வர் முனைவர். கே.ஜி. பார்த்திபன் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் முனைவர் B.நாதன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சிக் கான ஏற்பாட்டினை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை தலைவர், முனைவர் முத்துவேல் லட்சுமிகந்தன் சிறப்புற செய்தனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad