இராமநாதபுரம் மாவட்டம் வர்த்தக சங்க தலைவர் M.A.தனபாலன், பேரனும் D.ராம் பிரகாஷ் மகனுமாகிய ஶ்ரீரஷத், நடைபெற்ற முடிந்த யுபிஎஸ்சி(UPSC) தேர்வில் இந்திய அளவில் 52−வது இடமும் தமிழக அளவில் 5−இடமும் பெற்று வெற்றி பெற்று உள்ள அவரை இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மாணவன் ஶ்ரீரஷத் வீட்டிற்கு நேரில் சென்று மாணவனை பாராட்டி. வாழ்த்துத் தெரிவித்தார்.
இராமநதபுரத்தில் தனது பள்ளி படிப்பை முடித்துக்கொண்ட ஸ்ரீரஷத் டெல்லி வஜ்ரம் அண்ட் ரவி ஐ.ஏ.எஸ் இன்ஸ்டியூட்டில் பவுண்டேஷன் கோர்ஸ் மற்றும் டெல்லியிலேயே ஆப்ஷன்ஸ் கோர்ஸ்களை முடித்து யுபிஎஸ்சி (தேர்வில்) இந்திய அளவில் 52 வது இடமும் தமிழக அளவில் 5,வது இடமும் பெற்றுள்ளார்.
அவர் தனது கடின உழைப்பால் இந்த பெரும் வெற்றியை பெற்றுள்ளார். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ஶ்ரீரஷத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக