ஆம்பூர் அருகே அரசு பேருந்து மீது தோல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து. இதில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

ஆம்பூர் அருகே அரசு பேருந்து மீது தோல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து. இதில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஆம்பூர் அருகே அரசு பேருந்து மீது தோல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து. இதில் 15 க்கும் மேற்பட்டோர்  படுகாயம்!
வாணியம்பாடி,மே.26- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு  அரசு பேருந்து பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது பேர்ணாம்பட்டில் இருந்து தோல் ஏற்றி கொண்டு ஆம்பூர் நோக்கி வந்த லாரி அரசு பேருந்து மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜா,நடத்துணர் குணசேகரன், லாரி ஓட்டுநர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உபேஷ் மற்றும்  பேருந்தில் பயணம் செய்த காலனி தொழிற்சாலை  தொழிலாளர்கள் முஹம்மத் ஆசிப், மகாலிங்கம், ராதிகா, ரீனா ரோஜா, பிரியா, ரஞ்சனி, சசிகலா, ஜெய்ஸ்ரீ, தீபா, இளமதி, ஜெயக்கொடி, சாதியா உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம டைந்தனர் . படுகாயம் அடைந்தவர்களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் உபேஷ் மற்றும் பெண் தொழிலாளர்கள் ரஞ்சனி, சசிகலா உட்பட மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபத்து நடக்கும் முன் பேருந்து நிறுத் தத்தில் இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.தகவல் அறிந்து ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார், மேலும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்து காரணமாக ஆம்பூர் பேர்ணாம்பட்டு சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு செய்தியாளர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad