பேராவூரணியில் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, 2025-26ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடந்தது.
தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். செயலர் சந்திரமோகன் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜா, துரையரசன், ஜெயச்சந்திரன், சரவணன், கோவிதரன், ஜெயக்குமார், குட்டியப்பன், கலைச்செல்வம், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய தலைவராக இளங்கோ, செயலாளராக மணிராஜ், பொருளாளராக பாலமுருகன், கௌரவ தலைவராக ராஜா மற்றும் நிர்வாகிகள் பணியேற்றனர். மாநிலத் தலைவர் விஜயபானு புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்திப் பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் கிளப் மாவட்ட முதல் நிலை ஆளுநர் விஜயலெட்சுமி, கட்டுமானப் பொறியாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் சையதுஷாகிர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.
இதில், பொறியாளர்கள், லயன்ஸ், ரோட்டரி, வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக