25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முத்து மாரியம்மன் கோவில்! ஆதிதிராவிடரை புறக்கணித்து பண்டிகை செய்யும் மாற்று சமூகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு!
திருப்பத்தூர் ,மே 5 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரப்பகுதி 36 வது வார்டு வெங்கடேஸ் வரா நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து சமூகத்தினரை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்ற னர் இந்த நிலையில் கடந்த 25 வருடங் களுக்கு முன்பு அதே பகுதியில்அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து பணம் வசூல் செய்து புதிதாக முத்துமாரியம்மன் கோவில் கட்டி உள்ளனர். இந்த நிலை யில் அந்தப் பகுதியில் மேலும் மாற்று சமூகத்தினர் அதிகமானதன் காரணமாக அந்த முத்து மாரியம்மன் கோவிலில் உள்ளே அனுமதிக்காமலும் மேலும் ஆதி திராவிட மக்களை மட்டும் புறக்கணித்து விட்டு பண்டிகை செய்வதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. மேலும் நாளை பண்டிகை நடைபெற உள்ள நிலையில் தங்களை சேர்க்காமல் மாற்று சமூகத் தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பண்டி கை செய்வதால் மிகவும் மன உளைச் சலுக்கு ஆளாகியுள்ளோம்.இந்த சம்பவம் தங்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதாக தோணுகிறது. எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் நாளை நடைபெறும் பண்டிகையில் அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து பண்டிகை யை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக