அருள் நிறை ஏழு கண்ணியர்கள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா !
குடியாத்தம் , மே 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை மாட்டு சந்தை திடலில் அமைந் துள்ள அருள் நிறை ஏழு கண்ணியர்கள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. திருவிழா அன்று காலை யில் பூங்கரகம் எடுத்து வரப்பட்டது. சரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வீதியுலா நடைபெற்றது. பின்னர் கூழ்வாரத்திலும், பொங்கல் வைத்தல் மாவிளக்கு இடுதல் முதலியவை நடைபெற்றன. மாலையில் அருள்நிறை சிவகாமி அம்மன் உற்சவ வீதி உலா நடைபெற்றது. இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தில் அப்பகுதி மக்கள், பொதுமக்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டனர். விழாவிற் கான ஏற்பாடினை ஆலய விழா குழுவின ரும், இளைஞர் நற்பணி மன்றத்தினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக