மானாமதுரையில் முன்னாள் இந்திய பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் 34வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்திய திருநாட்டின் ஒன்பதாவது பிரதமராக பதவி வகித்த பாரதரத்னா மாண்புமிகு திரு ராஜுவ் காந்தி அவர்களின் 34வது நினைவு நாள் தினமான மே 21 ஆம் தேதி புதன்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நகரத் தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு எஸ். பி. புருஷோத்தமன் அவர்களின் தலைமையிலும், மாநில சிறுபான்மைத்துறை துணை ஒருங்கிணைப்பாளர் து. ஜ. பால் நல்லதுறை அவர்களின் முன்னிலையிலும் திரு ராஜிவ் காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மலர் தூவி நினைவஞ்சலி மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் காசி, வள்ளகொண்டான், முரளி, கௌதம், சக்கரை, முரளி, நாகூரம்மாள், நாகவள்ளி மற்றும் நகர் சிறுபான்மைத்துறை தலைவர் ஜே. கெ. லிவிங்ஸ்டன் உள்ளிட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் இந்நினைவஞ்சலியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக