மூலனூரில் 43 குற்ற வழக்குகள் கொண்ட பிரபல கொள்ளையன் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 மே, 2025

மூலனூரில் 43 குற்ற வழக்குகள் கொண்ட பிரபல கொள்ளையன் கைது



திருப்பூர்மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுக்கநாயக்கன்பட்டியில்  முத்துச்சாமி  என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் திருடியது சம்பந்தமாக மூலனூர் காவல் நிலையத்தில்  

வழக்கு பதிவு செய்து  குற்ற செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வந்தனர். தாராபுரம்  காவல் துணை கண்காணிப்பாளர் 

சுரேஷ்குமார்  மேற்பார்வையில் மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து திருடனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்..

தனிப்படையை சேர்ந்த உதவி ஆய்வாளர்  பாலமுருகன் மற்றும்

தலைமை காவலர்கள் ரமேஷ்குமார்,.

கலைச்செல்வன்,காளிராஜ்,பிரபு 

ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்து குற்றவாளியின் உருவத்தை வைத்து தேடி வந்த நிலையில் மூலனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முத்துசாமி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.மேலும் அவர் மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே உள்ள கருப்பபட்டியை சேர்ந்த தங்கபாண்டி என்பவரது மகன் தனுஷ் (எ) தனுஷ்கோடி (வயது-43)

என்பதும் அவர்

சென்னிமலை அம்மாபாளையத்தில் ஒரு கார்,கோபி

செட்டிபாளையத்தில் ஒரு பைக் திருடியதும் தெரிய வந்தது.மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர்மீது போத்தனூர்,காரமடை,சத்திரபட்டி,ஒட்டன் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் தனுஷ்கோடியை கைது செய்ததோடு அவர் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad