அதிமுக ஒன்றிய செயலாளர் அடாவடி பாதிக்கப்பட்டவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு!
திருப்பத்தூர், மே 4 -
திருப்பத்தூர் மாவட்டம் மூன்று வருடத் தில் மீட்டுக் கொள்வதாக 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கிரையம் செய்து கொடுத்த நபர்! அதிமுக ஒன்றிய செயலாளர் விற்று விட்டதாக குற்றச்சாட்டு! 32 லட்சம் கொ டுத்தால் கொடுக்குறோம் என அடாவடி! பாதிக்கப்பட்டவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குள்ளப்பன் மகன் வெங்கடேசன் இவர் தனது சொந்தமான 37 சென்ட் நிலத்தை அவசர கடன் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பணத்திற்காக அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு மூன்று வருடத் திற்குள் மீட்டுக் கொள்வதாக கூறி கிரையம் செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு அசலும் வட்டியுடன் சென்று நிலத்தை மீட்டுக் கொள்வதாக கூறியுள் ளார்.ஆனால் தங்கராஜ் பல சாக்கு போக்குகளை கூறி அழை கழித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெங்கடேசனுக்கு தெரியாமல் தங்கராஜ் கடந்த இரண்டாம் மாதம் நாட்றம்பள்ளி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மனைவிக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து கேட்டால் 32 லட்சம் கொடுத்துவிட்டு உன்னுடைய நிலத்தை வாங்கிக் கொள்ள எனவும் மேலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் எனக் கூறி மிரட்டுவதாகவும் கூறி இன்று நிலத்தை மீட்டு தரவேண்டும் என வெங்கடேசன் எஸ்பி அலுவலகத் தில் வெங்கடேசன் புகார் அளித்தார்.
செய்தியாளர். மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக