கண்டாதேவி இசை மற்றும் நாட்டிய அகாடமி பயிற்சி நிலையம் சார்பில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் சலங்கை பூஜை விழா!!
ராணிப்பேட்டை , மே 31 -
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நேருஜி நகரில் கண்டாதேவி இசை மற்றும் நாட்டிய அகடமி பயிற்சி நிலையம் உள்ளது. இந்த பயிற்சி நிலையத்தின் 12ம் ஆண்டு விழா மற்றும் சலங்கை பூஜை விழா அரக்கோணம் திருத்தணி சாலையிலுள்ள ஜோதி ராமசாமி மஹாலில் சிறப்பாக நடை பெற்றது. விழாவிற்கு அகாடமி தலைவர். கே.ஆர்.சதீஷ் பாபு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர். கே. ஆர்.இந்திரா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாள ராக செங்கல்பட்டு மாவட்டம் விநாயகா நாட்டாலயா நிறுவனர். டாக்டர். எஸ். ஆர். மீனாட்சி பிரியா ராகவன் மற்றும் வளர் முருகன் கலந்து கொண்டு நிகழ்ச்சி யினை துவக்கி வைத்து சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வெஸ்டன் நடனம், கிளா சிக்கல் நடனம், கீபோர்டு வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிபடுத்தினர். கிளாசிகல் மாஸ்டர் டாக்டர் புகழேந்தி பெருமாள் மற்றும் நித்திய கல்யாணி எம். விஜயா, குமாரி கீர்த்திகா ராமசந்திரன், ஆர்.தாமரை செல்வன் சாய்மாஸ்டர், டி.யோகநாதன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். மாணவர்களின் பெற்றோர் கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக