பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மத்திய சிறையில் தமிழ் வார விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 மே, 2025

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மத்திய சிறையில் தமிழ் வார விழா!

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மத்திய சிறையில் தமிழ் வார விழா!
வேலூர் , மே 5 -

வேலூர் மாவட்டம் சிறைகள் மற்றும் சீர்த்திருத்தபணிகள் துறை தலைமை இயக்குநர் அவர்களின் அறிவுரைகளின் படி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வார விழா வேலூர் மத்திய சிறை அலுவல கத்தில் ஒரு வாரம் கையெழுத்து போட்டி, வினாடி வினா போட்டி, பேசும் போட்டி. அறிவியல் தமிழ், கணித தமிழ், தமிழ் புதினங்கள், கவிதை வாசிப்பு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்விற்கு சிறை கண்காணிப்பாளர் பி.தர்மராஜ் தலைமை வகித்து பேசினார்.  தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலாளர் செ.நா.ஜனார்த் தனன், தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம் மல் விருது பெற்ற விருதாளர் கவிஞர், எழுத்தாளர் நூலசிரியர் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க  பொருளா ளர் இரா.சீனிவாசன் ஆகியோர்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அலுவலர் களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். சிறை அலுவலர் (பொ) பி.மகா ராஜன், சிறை அலுவலர் பயிற்சி எஸ்.ரத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழில் உடனடியாக பேசும் போட்டியில் வெற்றி பெற்ற சிறை நல அலுவலர் ஆர்.மோகன், பயிற்சி சிறை அலுவலர் ஆர்.ரத்தினகுமார், இடைநிலை ஆசிரியர் பி.அருண், இளநிலை உதவி யாளர் கே.சாரதாதேவி, கவிதை வாசிப்பு போட்டிகளில் எஸ்.ஜெகஜீவன்ராம், பி.அருண். பி.விமலா, கட்டுரை போட்டி யில் கே.சாரதாதேவி, ஜெ.ஷோபா, கையெழுத்து போட்டியில் ஆர்.பார்வதி, பி.விமலா, படத்தை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லும் போட்டியில் ஆர்.பிரியதர்ஷினி, எம்.முருகன், வி.பரமேஸ்வரராஜ், கணினி தமிழ் குறித்த வினாடி வினா போட்டியில் எம்.கபார்கான், பி.வினோத், டி.தினேஷ் குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் சிறைவாசிகள் நலச்சங்க அலுவலக மேலாளர் எஸ்.அம்பானி  மற்றும் சிறைத்துறை அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
முடிவில் தெழிற்கல்வி பயிற்றுனர் எஸ்.ஜெகஜீவன்ராம் நன்றி கூறினார்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad